பல்லவ புராணக்கதைகள் - ஓர் அறிமுகம்

ஒரு கலைஞரின் பதிவு  - கைலாசநாதர் கோவிலின் ஒரு பகுதி

ஒரு கலைஞரின் பதிவு - கைலாசநாதர் கோவிலின் ஒரு பகுதி

புதையல் வேட்டைக்கு வரவேற்கிறோம்!

இன்று, நான் எங்கள் காஞ்சிபுரத்தில் பல்லவர் புத்தகத்தின் திரையை விலக்கப் போகிறேன். உலகின் பல்வேறு பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறிக்கோளை அடைய ஒன்றாக வந்த, ஒரு பழங்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, கலாச்சார மற்றும் சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய தெற்கு நாகரிகம், தென்னிந்தியாவின் வளர்ச்சியை பற்றி அறிய எங்களுக்கு உதவும் மக்கள் குழுவின் ஒரு கூட்டு முயற்சி இது.

பல்லவ வம்சம், கலை, இலக்கியம், கட்டிடக்கலை, மதம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஒரு கலாச்சார மறுமலர்ச்சி அறிவித்தது. பல்லவரின் செல்வாக்கு தென்னிந்தியாவில் மட்டும் இன்றி, தென்கிழக்கு ஆசியாவின் நாகரிகத்தில் செல்வாக்கு ஊடுருவியது. அவர்களுக்குப் பின் ஆண்ட, மிகவும் பிரபலமான தஞ்சாவூர் சோழர்கள், அவர்களின் சமூக, அரசியல் மற்றும் மதம் பலவற்றை ஏற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது. இதை உணர்த்தும் விதமாக சோழ கட்டிடக்கலையில், பல்லவ செல்வாக்கு பிரதிபலிக்கிறது.

இருப்பினும், இந்தியாவின் மறந்துபோன பல வம்சங்களைப் போல, இந்திய கலாச்சாரத்திற்கு பல்லவர்களின் பங்களிப்புக்குரிய மதிப்பு கிடைக்கவில்லை. 

எங்கள் புத்தகம், அதன் சக்தியின் உச்சத்தில், தென்னிந்தியாவையும் இலங்கையின் சில பகுதிகளையும் கூட ஆட்சி செய்த இந்த ஏகாதிபத்திய சக்தியுடன் உங்களை அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.

புத்தகத்தில் அவற்றின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள், பல்லவர்களின் ஆட்சி உரு பெற்ற நிகழ்வுகளின் காலவரிசை, பிற பிராந்திய சக்திகள் மற்றும் அவர்களின் விரோதிகளுடனான அவர்களின் தொடர்பு, மத சிந்தனை,  கட்டடக்கலையின் தனித்தன்மை மற்றும் அவற்றின் பல பண்புக்கூறுகள் ஆகியவை உள்ளன.

இந்த புத்தகம், தரமான படங்கள், அதிகாரப்பூர்வ ஆதாரங்களிலிருந்து விவரங்கள் மற்றும் அவற்றின் ஆட்சியின் கணக்குகள், நினைவுச் சின்னங்கள், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நாகரிகங்கள், கடுமையான போர்கள் மற்றும் புதிரான நிகழ்வுகள், பெரிய புகழ்பெற்ற மன்னர்கள் சகாப்தத்திற்கு உங்களை இழுக்க அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மாறுபட்ட பார்வையாளர்களுக்காக இந்த புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் வெளியிடப்படும். எனவே, பல்லவர்கள் மற்றும் அவற்றின் விலைமதிப்பற்ற மரபு பற்றிய மேலும் அற்புதமான வலைதளப்பதிவுகளுக்கு காத்திருங்கள்! ….

…. இணைந்து இருங்கள்!

(தமிழாக்கம்) ருக்மிணி

Previous
Previous

Uncovering Pallavas of Kanchipuram

Next
Next

Pallavas ? Who are they ?